Enable Javscript for better performance
மண் சரிந்து தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஆரணியை அடுத்த மெய்யூரில் சிறுபாலம் கட்டும் பணியின் போது, மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.
    ஆரணி - ஆற்காடு செல்லும் சாலையிலிருந்து மெய்யூர் செல்லும் வழியில் சிறுபாலம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு விழுப்புரம் மாவட்டம், புதுவறங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் (24) என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மண் சரிந்தது. அதில் சிக்கிய அவரை பணியில் ஈடுபட்டிருந்த சக தொழிலாளிகள் மீட்டு, ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
    இதுகுறித்து ஆரணி கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai