சுடச்சுட

    

    மரத்தில் இருந்து தவறி விழுந்து பொறியியல் கல்லூரி மாணவர் சாவு

    By DIN  |   Published on : 11th May 2017 06:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறு அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த பொறியியல் கல்லூரி மாணவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
    செய்யாறை அடுத்த அரசங்குப்பம் கிராமம் பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் தேவராஜ் (21). இவர், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
    இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி (சனிக்கிழமை) வீட்டின் அருகே உள்ள பனை மரத்தில் நுங்கு பறிப்பதற்காக ஏறியுள்ளார். அப்போது, அதிலிருந்து தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
    இதுகுறித்து தூசி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai