Enable Javscript for better performance
மின்னல் பாய்ந்ததில் பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கீழ்பென்னாத்தூர் அருகே மின்னல் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தார்.
    கீழ்பென்னாத்தூரை அடுத்த கீக்களூர் கிராமம், பள்ளகொல்லை பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (41). இவரது மனைவி வள்ளி (37). இருவரும் செவ்வாய்க்கிழமை மாலை தங்களது வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தனராம்.
    அப்போது, திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. மழையில் நனையாமல் இருக்க வள்ளியும், அவரது தாய் சின்னத்தாயும் (65) அங்குள்ள தகரத்தால் வேயப்பட்ட வீட்டின் ஓரமாக நின்றிருந்தனராம். அப்போது, வீட்டின் மீது மின்னல் பாய்ந்துள்ளது.
    இதில், வள்ளி உயிரிழந்தார். சின்னத்தாய் காயமடைந்தார்.
    தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீஸார் அங்கு வந்து வள்ளியின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த சின்னத்தாய் அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai