சுடச்சுட

  

  அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்கக் கோரி விழிப்புணர்வு

  By DIN  |   Published on : 12th May 2017 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செங்கம் அருகே முன்னூர்மங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை சேர்க்கக் கோரி, அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் துண்டுப் பிரசுரம் விநியோகித்து பள்ளி ஆசிரியர்கள் வியாழக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
  புதுப்பாளையம் ஒன்றியம், முன்னூர்மங்கலம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மாணவர்களை சேர்க்கக் கோரி, பள்ளித் தலைமை ஆசிரியர் பழநி தலைமையில், ஆசிரியர்கள் முன்னூர்மங்கலம் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
  அப்போது, 5 வயதுடைய குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் எனக் கூறியதுடன், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழக்கும் 14 வகையான நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை குழந்தைகளின் பெற்றோரிடமும், பொதுமக்களிடமும் ஆசிரியர்கள் விநியோகம் செய்தனர்.
  மேலும், முன்னூர்மங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில் சுத்தமான குடிநீர், கணினி வசதி உள்ளிட்ட வசதிகள் உள்ளதாக ஆசிரியர்கள் எடுத்துக் கூறினர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai