Enable Javscript for better performance
ஆரணி தர்மராஜா கோயிலில் விடையாற்றி உத்ஸவம்- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி கொசப்பாளையம், ஸ்ரீதர்மராஜா கோயிலில் வியாழக்கிழமை விடையாற்றி உத்ஸவம் நடைபெற்றது.
    ஆரணி கொசப்பாளையம், ஸ்ரீதர்மராஜா கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி, மகாபாரத சொற்பொழிவு, நாடகம், படுகளம், தீமிதி திருவிழா, பட்டாபிஷேகம் ஆகியவை புதன்கிழமை (மே 10) வரை நடைபெற்றன.
    இந்நிலையில், வியாழக்கிழமை அக்னி வசந்த விழா விடையாற்றும் வகையில் ஸ்ரீஅர்ஜுனர், ஸ்ரீபாஞ்சாலி அம்மன், ஸ்ரீகண்ணபிரான் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை இரவு சுவாமி ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவர் கப்பல் இ.கங்காதரன், துளுவ வேளாளர் சங்க இயக்குநர் கே.கண்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai