சுடச்சுட

  

  ஆள்கள் கடத்தப்படுவதாக தவறான தகவல்: கர்நாடக போலீஸாரை வழி மறித்த கண்ணமங்கலம் போலீஸார்

  By DIN  |   Published on : 12th May 2017 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆள்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தவறான தகவலின்பேரில், விசாரணைக் கைதிகளை அழைத்துச் சென்ற கர்நாடக போலீஸாரை வழி மறித்து கண்ணமங்கலம் போலீஸார் வியாழக்கிழமை விசாரணை செய்தனர்.
  கர்நாடக மாநிலத்தில் 14 கோடியே 80 லட்சம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் பிடிபட்ட வழக்கு விசாரணைக்காக வேலூர் மாவட்டம், வாழைப்பந்தல் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (57), அவரது மகன்கள் காந்தி (24), சாஸ்திரி (23) ஆகிய 3 பேரையும் கைது செய்து, விசாரணைக்காக கர்நாடக மாநிலத்துக்கு அந்த மாநில போலீஸார் அழைத்துச் சென்றனர்.
  இதனிடையே, ஆள்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கர்நாடக போலீஸார் விசாரணைக் கைதிகளை அழைத்துச் சென்ற காரை வழிமறித்து கண்ணமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
  விசாரணையின்போது, கர்நாடக போலீஸார் தாங்கள் போலீஸார் என்பதற்கான அடையாள அட்டையையும், நாகராஜ் உள்ளிட்டோரை விசாரிப்பதற்காக கைது செய்ததற்கான ஆணையையும் காண்பித்தனர்.
  இதையடுத்து, விசாரணைக் கைதிகளை கர்நாடக போலீஸார் அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai