சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள 57 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு வியாழக்கிழமை தொடங்கியது.
  இந்தப் பணியிடங்களுக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 9 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் திருவண்ணாலை மவுன்ட் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
  மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) குருமூர்த்தி தலைமையில், கால்நடை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நேர்காணலை நடத்துகின்றனர்.
  முதல்கட்டமாக விண்ணப்பதாரர்களின் கல்விச் சான்றுகள், சாதிச் சான்றுகள், முன்னுரிமை கோரும் சான்றுகள் சரிபார்க்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மாடுகளை தைரியமாக பிடிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பது நிபந்தனை.
  எனவே, நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்கள் பசு மாடுகளை பிடித்துக் காட்டினர். சைக்கிள்களையும் ஓட்டிக் காண்பித்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai