Enable Javscript for better performance
கெங்கவரத்தில் மனுநீதி நாள் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கலசப்பாக்கத்தை அடுத்த கெங்கவரம் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
    முகாமுக்கு கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். வட்டாட்சியர் மணி, சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் மலர்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் காயத்திரி வரவேற்றார்.
    சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்பட 92 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
    அதிமுக அம்மா அணி மாவட்ட துணைச் செயலர் துரை, ஒன்றியச் செயலர் திருநாவுக்கரசு, வருவாய் ஆய்வாளர் சேட்டு மற்றும் வருவாய்த் துறையினர், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai