சுடச்சுட

    

    வேலூர், சத்துவாச்சாரி பொன்னியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை காளை விடும் போட்டி நடைபெற்றது.
    இக்கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காளை விடும் போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகள் ஓடிச் செல்லும் வழிநெடுகில் இருபுறமும் சவுக்குக் கட்டைகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
    போட்டியை எம்எல்ஏ ப.கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இதில், காளைகள் சீறிப் பாய்ந்து சென்றனர்.
    குறைவான நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் மாவட்டப் பொருளாளர் சி.கே.தேவேந்திரன், திமுக பிரமுகர் ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    போட்டியையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai