சுடச்சுட

  

  சித்ரா பெளர்ணமியையொட்டி, கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  வந்தவாசி கோமுட்டி குளக்கரையில் உள்ள ஸ்ரீஜெய்சக்தி பீட காளியம்மன் கோயிலில் 40-ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலையில் கோமாதா பூஜை, கணபதி ஹோமம், விநாயகர் பூஜை, நாகேந்திர பூஜை, முனீஸ்வரன் பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
  பின்னர், மூலவர், உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். மாலையில் மூலவர் அம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
  உற்சவர் அம்மன் திருகைலாய அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும், உலக நன்மை வேண்டி ஸ்ரீமகா ப்ரத்யங்கிரா ஹோமம் நடந்தது.
  இரவு சிறப்பு சுழலும் சொல் அரங்கம் நடைபெற்றது. இதில், பெருமையாக வாழப் பெரிதும் தேவை கல்வியே என்று
  பெ.அழகேசன், குடும்பமே என்று மா.மோகனம்மாள், செல்வமே என்று வீ.தமிழரசன், சமூகமே என்று கா.செந்தமிழ்ச்செல்வன், தாய்மொழியே என்று நா.முத்துவேலன், நாடே என்று மா.ஏழுமலை ஆகியோர் பேசினர். பின்னர், பெருமையாக வாழப் பெரிதும் தேவை கல்வியே என்று நடுவரும், வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கத் தலைவருமான வே.சிவராமகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார்.
  விழாவில் கோயில் திருப்பணிக்குழுத் தலைவர் ப.மச்சேந்திரன், ஸ்ரீஜெய்சக்தி காளியம்மன் அறக்கட்டளைத் தலைவர் எ.செல்வராஜ், கோயில் நிர்வாகி சிவா சுவாமிகள் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
  செங்கம்: இதேபோல, செங்கம் ஸ்ரீ வீரசுந்தர ஆஞ்சநேயர் கோயிலில் சித்ரா பெளர்ணமியையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
  ஆரணி: ஆரணி சைதாப்பேட்டையில் உள்ள அனந்ததீர்த்தங்கரர் ஜைன ஆலயத்தில் சித்ரா பெளர்ணமியையொட்டி சுவாமிகளுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. ஜைன பக்தர்கள் 51 பால் குடங்களை ஊர்வலம் எடுத்து வந்து ஆலயத்தில் உள்ள ஜோலாமாலினி, பத்மாவதி அம்மன் சுவாமிகளுக்கு பாலாபிஷேகம் செய்தனர். ஏற்பாடுகளை அந்தப் பகுதி ஜைன பக்தர்கள் செய்திருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai