சுடச்சுட

  

  செங்கத்தில் வீதிகள்தோறும் நீதியின் பயணம் என்ற தலைப்பில் திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, செங்கம் வட்ட சட்டப் பணிகள் குழு இணைந்து நடத்திய சட்ட விழிப்புணர்வுப் பேரணி, முகாம் வியாழக்கிழமை நடைபெற்றன.
  மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி மகிழேந்தி தலைமை வகித்து, மகளிர் குழு பெண்கள், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர், அவர் பேசியதாவது:
  நீதிமன்றங்களில் தற்போது பல ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு வழக்கு முடிவதற்கு பல ஆண்டுகள் ஆகின்றன. எனவே, வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், பொதுமக்களுக்கு இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.
  மேலும், பொதுமக்களுக்கான சட்டப் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள இலவச சட்டப்பணிகள் குழு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, இலவச சட்ட விழிப்புணர்வு முகாம், இலவச சட்டப்பணிகள் குழுவை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது வழக்குகளை விரைந்து முடித்துக்கொள்ளலாம் என்றார்.
  முன்னதாக புதுவாழ்வுத் திட்டம் எத்திராஜ் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட சார்பு நீதிபதி முனுசாமி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் ராஜ்மோகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நாராஜா, பார் ஆசோசியேஷன் தலைவர் மோகன்ராஜ், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் விஜயரங்கன், வழக்குரைஞர்கள் செல்வராஜ், தினகரன், செல்வம், கோபால்சாமி, ஆணையாளர்கள் கருணாகரன், சக்திவேல், மகளிர் குழு பெண்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நீதிமன்ற இளநிலை உதவியாளர் பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai