Enable Javscript for better performance
திருவண்ணாமலை மாவட்டத்தில் 91.84% தேர்ச்சி: மாநிலத்தில் 23-ஆவது இடம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 91.84% தேர்ச்சி: மாநிலத்தில் 23-ஆவது இடம்

    By DIN  |   Published on : 12th May 2017 11:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில் 91.84 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம், மாநில அளவிலான தேர்ச்சி விகிதத்தில் திருவண்ணாமலை 23-ஆவது இடத்தை பிடித்தது.
    தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 2 முதல் 31-ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 91.84 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில்...: திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில் திருவண்ணாமலை, செய்யாறு என 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 8,909 மாணவர்கள், 9,029 மாணவிகள் என மொத்தம் 17,938 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களில் 8,039 மாணவர்கள், 8,449 மாணவிகள் என மொத்தம் 16,488 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
    செய்யாறு கல்வி மாவட்டத்தில்...: செய்யாறு கல்வி மாவட்டத்தில் 4,479 மாணவர்கள், 5,472 மாணவிகள் என மொத்தம் 9,951 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களில் 3,964 மாணவர்கள், 5,050 மாணவிகள் என மொத்தம் 9,014 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
    25,502 பேர் தேர்ச்சி: திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 211 அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 13,388 மாணவர்கள், 14,501 மாணவிகள் என மொத்தம் 27,889 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 12,003 மாணவர்கள், 13,499 மாணவிகள் என மொத்தம் 25,502 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.84 சதவீத தேர்ச்சியாகும்.
    திருவண்ணாமலைக்கு 23-ஆவது இடம்: தமிழகம் முழுவதும் 32 வருவாய் மாவட்டங்கள் உள்ளன. பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீத தேர்ச்சி பெற்று தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் 91.84 சதவீத தேர்ச்சி பெற்று தமிழகத்தில் 23-ஆவது இடம் பிடித்துள்ளது.
    ஆண்கள் பள்ளிகள் 85.42 தேர்ச்சி: மாவட்ட ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 4,149 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களில், 3,544 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 85.42 சதவீத தேர்ச்சியாகும்.
    பெண்கள் பள்ளிகள் 92.81 தேர்ச்சி: மாவட்ட பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 6,785 மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களில், 6,297 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 92.81 சதவீத தேர்ச்சியாகும்.
    இருபாலர் பள்ளிகள் 93.03 தேர்ச்சி: மாவட்ட இருபாலர் பள்ளிகளில் பயின்ற 16,835 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களில், 15,661 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 93.03 சதவீத தேர்ச்சியாகும்.

    தேர்ச்சி விகிதம் தொடர் உயர்வு
    திருவண்ணாமலை மாவட்டத்தின் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2015-ஆம் ஆண்டு, மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 83.43 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 2016-ஆம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 90.67 சதவீதமாக உயர்ந்தது. இது, 2017-ஆம் ஆண்டில் 91.84 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 1.17 சதவீத தேர்ச்சி அதிகரித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai