சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட பழங்குடியினர் மேம்பாட்டு திட்ட அலுவலராக ப.சுப்பிரமணியன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
    திருவண்ணாமலை மாவட்ட பழங்குடியின மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, மாவட்ட பழங்குடியினர் நல அலுவலகம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் திருவண்ணாமலை மாவட்ட பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்ட அலுவலராக ப.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    இவர், வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், ப.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
    பழங்குடியினரின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் மூலம் கறவை மாடு, தேனி வளர்ப்பு, கோழி வளர்ப்பு உள்ளிட்ட திட்டங்கள், சுய தொழில் தொடங்க மானிய உதவி, வீடு கட்டவும், மலைவாழ் மக்களுக்கு வேளாண்மை தொடர்பான பணிகள் வழங்கவும் அரசு பல்வேறு திட்டங்களை பழங்குடியினருக்காக செயல்படுத்துகிறது. இந்தத்
    திட்டங்கள் அனைத்தும் பழங்குடியின மக்களுக்கு சென்றடைய விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai