Enable Javscript for better performance
பாலத்தில் கார் மோதல்: 7 பேர் பலத்த காயம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே பாலத்தில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
    கடலூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (35). இவர், தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலையில் நடைபெற்ற சித்ரா பௌர்ணமி விழாவுக்காக புதன்கிழமை காரில் திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர், சுவாமி தரிசனம், கிரிவலம் ஆகியவற்றை முடித்துவிட்டு இரவு 9 மணிக்கு மீண்டும் கடலூர் புறப்பட்டார்.
    திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலை, பவித்திரம் கூட்டுச் சாலை அருகே கார் சென்றபோது எதிரே ஒரு பைக் வந்தது. அந்த பைக் மீது மோதாமல் இருக்க சந்தோஷ்குமார் காரை இடதுபுறம் திருப்பிய நிலையில், எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
    இந்த விபத்தில், சந்தோஷ்குமார், அவரது மனைவி சாந்தா (32), மகன் சாருகேஷ் (8), மகள்கள் சங்கவி (12), சாருமதி (10), உறவினர்கள் சஞ்சீவிதமிழ் (19), நந்தி (25) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
    இவர்களை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, வெறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai