சுடச்சுட

  

  திருவண்ணாமலைக்கு கிரிவலத்துக்கு வந்த பக்தர்கள், திரும்பிச் செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால் அவதிப்பட்டனர்.
  திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பெளர்ணமி விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வந்திருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் வந்திருந்தனர்.
  சிலர் மட்டுமே சொந்த கார், வேன்களில் வந்திருந்தனர். இந்நிலையில், கிரிவலம் முடிந்து வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஏராளமான பக்தர்கள் தங்களது ஊர்களுக்குச் செல்ல அந்தந்த பகுதியில் இருந்த தாற்காலிகப் பேருந்து நிலையங்களில் குவிந்தனர்.
  வேலூர், சென்னை, புதுச்சேரி பக்தர்கள் அவதி: பெரும்பாலான பக்தர்கள் போதிய பேருந்து வசதி இல்லாமல் அவதிப்பட்டனர். குறிப்பாக, வேலூர், சென்னை, புதுச்சேரி செல்லும் பக்தர்கள் நீண்ட நேரமாக பேருந்துகளுக்காக காத்திருந்தனர். போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டதால், பேருந்து நிலையங்களுக்கு வந்த சில பேருந்துகளில் ஏற முடியாமல் தவித்த பெண்கள், குழந்தைகளின் நிலைமை பரிதாபமாக இருந்தது. சில தனியார் பேருந்துகளின் மேற்கூரைகளில்கூட பக்தர்கள் பயணம் செய்தனர்.
  ரயில் நிலையத்தில் கூட்டம்: ஒரு கட்டத்தில் பக்தர்கள் அனைவரும் திருவண்ணாமலை ரயில் நிலையத்தை நோக்கி செல்லத் தொடங்கினர். எனவே, ரயில் நிலையத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. விழுப்புரம் - காட்பாடி மார்க்கத்தில் இயக்கப்பட்ட ரயிலில் பயணிகள் முண்டியடித்து ஏறினர்.
  சிலர் ரயில்களின் ஜன்னல்கள் வழியாக தங்களது குழந்தைகளை உள்ளே விட்டு இடம் பிடித்தனர். இப்படியாக, வியாழக்கிழமை பகல் 10 மணி வரை பக்தர்கள் போதிய பேருந்து வசதி இல்லாமல் அவதிப்பட்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai