சுடச்சுட

    

    மானியத்தில் பண்ணை குட்டை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

    By DIN  |   Published on : 12th May 2017 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனக்காவூர் வட்டாரத்தில் அரசு மானியத்தில் பண்ணை குட்டை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    அனக்காவூர் வட்டாரத்தில் அரசு மானியத்தில் பண்ணை குட்டை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகி, இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
    பண்ணை குட்டை அமைப்பதால், மழை நீரை சேமித்து வைக்கலாம். மழை நீரை சேமிப்பதன் மூலம் சாகுபடி வயலில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
    மேலும், பண்ணை குட்டை மூலம் சொட்டு நீர் பாசனம் அமைத்தும் பயன்படுத்தலாம். மீன் வளர்த்து இரட்டிப்பு லாபமடையலாம்.
    இதுபோன்று பல வழிகளில் நன்மை தரும் பண்ணை குட்டையை அமைத்து விவசாயிகள் பயன் பெறலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai