சுடச்சுட

    

    திருவண்ணாமலையை அடுத்த நல்லான்பிள்ளைபெற்றாள், சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 46 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் நடைபெற்ற முகாமுக்கு திருவண்ணாமலை வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.சுப்பிரமணி தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் கே.மணிகண்டன் வரவேற்றார். முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 87 மனுக்கள் பெறப்பட்டன.
    இவற்றில் 36 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 42 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. உரிய ஆவணங்கள் இணைக்கப்படாத 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
    ஏற்றுக்கொள்ளப்பட்ட 36 மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.சுப்பிரமணி வழங்கினார்.
    முகாமில், வருவாய்த் துறை அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தச்சாம்பாடி: இதேபோல, சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு தலைமையிடத்து வட்டாட்சியர் ஆனந்தகுமார் தலைமை வகித்து, 65 பேரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
    பின்னர், சிறு, குறு விவசாயிகள் 10 பேருக்கு உடனடியாக சான்றுகளை அவர் வழங்கினார். மண்டல துணை வட்டாட்சியர் மனோகரன், வருவாய் ஆய்வாளர் சிவலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அகஸ்டின், பெருமாள்சாமி மற்றும் வருவாய்த் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai