சுடச்சுட

    

    பிளஸ் 2 பொதுத் தேர்வில் ஆரணி ஏ.சி.எஸ். மெட்ரிக் பள்ளி, பிங்க்ஸ் பப்ளிக் பள்ளி, எய்ம் மெட்ரிக் பள்ளி ஆகியவை 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
    ஆரணி ஏ.சி.எஸ் மெட்ரிக் பள்ளி: ஆரணி ஏ.சி.எஸ். மெட்ரிக் பள்ளியில் 211 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அனைவரும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவீத தேர்ச்சியை பெற்றுத் தந்துள்ளனர். இந்தப் பள்ளி மாணவர்கள் இ.லோகேஷ் 1,174 மதிப்பெண்களும், எம்.யுவராணி 1,172 மதிப்பெண்களும், எச்.சதாம்உசேன் 1,166 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
    அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களையும், தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் பள்ளிச் செயலர் ஏ.சி.பாபு, முதல்வர் செலின்திலகவதி ஆகியோர் பாராட்டினர்.
    பிங்க்ஸ் பப்ளிக் பள்ளி: பிளஸ் 2 தேர்வில் ஆரணி அருகே உள்ள கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் பி.கோகுலகிருஷ்ணன் 1,122 மதிப்பெண்களும், எஸ்.ஷன்மதி 1,121 மதிப்பெண்களும், ஜி.ரம்யா 1,111 மதிப்பெண்களும் பெற்றனர்.
    இந்தப் பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவீத தேர்ச்சியை பெற்றுத் தந்துள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களையும், தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் பள்ளித் தாளாளர் ரமேஷ் பாராட்டினார்.
    மேலும், பள்ளி நிர்வாகத் தலைவர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் சிவமுருகன், பொருளாளர் விஜயகுமார், அறங்காவலர் வெங்கடேசன், கூடுதல் தாளாளர் சித்ரா, பள்ளி நிர்வாகி கவிதா, பள்ளி முதல்வர் ஜான்மர்லின்இன்பகுமார் ஆகியோரும் மாணவர்களை பாராட்டினர்.
    எய்ம் மெட்ரிக் பள்ளி: ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள எய்ம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 116 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு 100 சதவீத தேர்ச்சியை பெற்றுத் தந்துள்ளனர்.
    இந்தப் பள்ளி மாணவர்கள் எஸ்.கீர்த்தனா 1,177 மதிப்பெண்களும், டி.லீலா 1,168 மதிப்பெண்களும், ஏ.எஸ்.பிரனவ்பாலாஜி 1,163 மதிப்பெண்களும் பெற்றனர்.
    அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களையும், தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் பள்ளி நிர்வாகத் தலைவர் எம்.மூர்த்தி, துணைத் தலைவர் வி.மகேஷ், தாளாளர் எம்.ஆர்.ரமேஷ், பொருளாளர் ஏ.சீனிவாசன், பள்ளி முதல்வர் ஆர்.ராஜேஷ் மற்றும் இயக்குநர்கள் பாராட்டினர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai