சுடச்சுட

    

    கீழ்பென்னாத்தூர் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

    By DIN  |   Published on : 13th May 2017 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கீழ்பென்னாத்தூர் பகுதி பள்ளிகளின் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
    ஆண்கள் பள்ளி: கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 243 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களில் 225 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93 சதவீத தேர்ச்சியாகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 23 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.ராமமூர்த்தி தெரிவித்தார்.
    மகளிர் பள்ளி: கீழ்பென்னாத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 274 மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 257 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94 சதவீத தேர்ச்சி என்று பள்ளித் தலைமை ஆசிரியை எம்.மலர்விழி தெரிவித்தார்.
    அமீன் பள்ளி: கீழ்பென்னாத்தூரை அடுத்த அமீன் மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 60 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில், 56 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93 சதவீத தேர்ச்சியாகும். இந்தப் பள்ளி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 22 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளித் தலைமை ஆசிரியர்
    கே.மணி தெரிவித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai