Enable Javscript for better performance
திருவண்ணாமலை எல்லைப் பிள்ளையார் கோயில் குளம் சீரமைப்புப் பணி: எம்எல்ஏ எ.வ.வேலு தொடக்கிவைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை எல்லைப் பிள்ளையார் கோயில் குளம் சீரமைப்புப் பணி: எம்எல்ஏ எ.வ.வேலு தொடக்கிவைத்தார்

    By DIN  |   Published on : 13th May 2017 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் பழைமைவாய்ந்த எல்லைப் பிள்ளையார் கோயில் குளத்தைச் சீரமைக்கும் பணியை திருவண்ணாமலை தொகுதி எம்எல்ஏ எ.வ.வேலு வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
    தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்குமாறு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, திமுகவினர் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் பணியை தொடங்கியுள்ளனர். அதன்படி, திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலை, அருணகிரிபுரத்தில் உள்ள நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பழைமைவாய்ந்த எல்லை பிள்ளையார் கோயில் குளத்தை சீரமைக்கும் பணி மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
    மாவட்டச் செயலரும், திருவண்ணாமலை தொகுதி எம்எல்ஏவுமான எ.வ.வேலு, குளம் சீரமைப்புப் பணியை தொடக்கி வைத்தார். திமுக மாவட்ட துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், முன்னாள் ஊராட்சித் தலைவர் இர.செல்வராஜ், நகராட்சி குழுத் தலைவர் குட்டி க.புகழேந்தி, அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் மாவட்டத் தலைவர் எ.ஏ.ஆறுமுகம் உள்பட ஏராளமானோர் சேர்ந்து குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    இதையடுத்து, பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினர் சேர்ந்து குளத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வெட்டியும், குளத்தில் உள்ள குப்பைகள், நெகிழிக் (பிளாஸ்டிக்) கழிவுகளை அகற்றியும் வருகின்றனர். சீரமைப்புப் பணியை தொடக்கி வைத்து எம்எல்ஏ எ.வ.வேலு பேசியதாவது:
    ஒரு வாரத்தில் இந்தக் குளம் சீரமைக்கப்படும். குளத்தை சீரமைக்க மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை தலைமையில், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பொன்.தனசு, சு.விஜி (எ) விஜயராஜ், த.செந்தில்குமார், நகர அமைப்பாளர் சு.ராஜாங்கம் ஆகியோரை கொண்ட குளம் சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai