சுடச்சுட

  

  தொகுதிக்கு ஒரு குளம் அல்லது ஏரி திமுக சார்பில் தூர்வாரப்படும் என்று எம்எல்ஏ எ.வ.வேலு கூறினார்.
  ஆரணி ஆற்றுப்பாலம் அருகில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட அவைத் தலைவர் கே.ஆர்.சீதாபதி தலைமை வகித்தார். திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலர் ஆர்.சிவானந்தம் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலர்கள் எம்.எஸ்.தரணிவேந்தன், கே.லோகநாதன், பரமேஸ்வரிராஜ்குமார், பொருளாளர் பி.பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வினால் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 80 சதவீத மாணவர்கள் பாதிக்கப்படுவர். நீட் தேர்வை ரத்து செய்வதற்கு திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்.
  திமுக தலைவர் கருணாநிதி தமிழக சட்டப் பேரவைக்குத் தேர்வாகி 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அவரின் 94-ஆவது பிறந்த நாளை வைர விழாவாக கொண்டாட உள்ளோம். மேலும், தொகுதிக்கு ஒரு குளம் தூர்வாரும் பணியை செய்ய உள்ளோம். இதனால் நீராதாரம் பெருகும். இந்தியை விட பழைமையான மொழியான தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai