Enable Javscript for better performance
பிளஸ் 2 தேர்ச்சி: மாநில அளவில்திருவண்ணாமலை பின்னடைவு- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் தமிழக அளவில் தொடர்ந்து முன்னேறி வந்த திருவண்ணாமலை மாவட்டம், இந்த ஆண்டு பின்னடைவைச் சந்தித்துள்ளது.
    தமிழ்நாட்டில் மொத்தம் 32 வருவாய் மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி விகிதத்தில் திருவண்ணாமலை மாவட்டம் 74.40 சதவீத தேர்ச்சியுடன் 32-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
    2015-ஆம் ஆண்டில் 83.43 சதவீத தேர்ச்சியுடன் 29-ஆவது இடத்துக்கு முன்னேறியது. 2016-ஆம் ஆண்டில் 90.67 சதவீத தேர்ச்சியுடன் 21-ஆவது இடத்துக்கு முன்னேறியது.
    தொடர்ந்து பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் திருவண்ணாமலை மாவட்டம் முன்னேறி வந்ததால் இந்த ஆண்டு முதல் 15 இடத்துக்குள் திருவண்ணாமலை மாவட்டம் வரும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்பார்த்தனர்.
    ஆனால், அவர்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில், திருவண்ணாமலை மாவட்டம் இந்த ஆண்டு 91.84 சதவீத தேர்ச்சி பெற்று 23-ஆவது இடத்துக்குச் சென்று பின்னடைவைச் சந்தித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai