சுடச்சுட

    

    பொதுமக்களுக்கு அதிகாரிகளால்தான் சிறப்பான சேவை செய்ய முடியும்: மாவட்ட ஆட்சியர்

    By DIN  |   Published on : 13th May 2017 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்களுக்கு உங்களால்தான் சிறப்பான சேவை செய்ய முடியும் என்று அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே ஊக்கம் அளித்துப் பேசினார்.
    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரேவின் 33-ஆவது பிறந்த நாளையொட்டி, வெள்ளிக்கிழமை அரசு அதிகாரிகள் பலர் அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு வருவாய்த் துறை குரூப் - 2 நேரடி நியமன அலுவலர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகளும் ஆட்சியரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
    அப்போது, அரசு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே பேசியதாவது:
    அரசுப் பணி என்பது மன நிறைவைத் தரும் பணி. ஏழை, எளிய பொதுமக்களுக்கு உங்களால்தான் சிறப்பான சேவை செய்ய முடியும். சுந்தர் பிச்சை போன்றவர்களின் சாதனைகளை எல்லாம் எண்ணிப் பார்க்கும்போது, நாம் செய்யும் சாதனைகள் ஒன்றும் பெரிதல்ல.
    எனவே, மற்றவர்கள் பாராட்டும் வகையில் அரசு அதிகாரிகளாகிய நீங்கள் சிறப்பான சேவை செய்து நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
    நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.செல்வபாண்டியன், மாவட்டச் செயலர் ந.மாசிலாமணி, துணைத் தலைவர் கோ.சேகர், அமைப்புச் செயலர் து.கிருஷ்ணமூர்த்தி, பிரசாரச் செயலர் த.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai