சுடச்சுட

    

    மண் வளம் காக்க வண்டல் மண் இட வேண்டும்: வேளாண் உதவி இயக்குநர் தகவல்

    By DIN  |   Published on : 13th May 2017 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மண் வளம் காக்க வண்டல் மண் இட வேண்டும் என்று அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி தெரிவித்தார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தற்போது நிலவி வரும் கடும் வறட்சியை சமாளித்து பயிர் சாகுபடி செய்வதற்கும், மண் வளத்தைக் காத்திடவும் ஏரிகளின் வண்டல் மண்ணை சாகுபடி நிலங்களுக்கு இட்டு சாகுபடி செய்யலாம். அனக்காவூர்
    வட்டார பொதுப்பணித் துறை ஏரிகளில் வண்டல் மண் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
    ஒரு யூனிட் (3 கன அடி அளவு) மண் எடுப்பதற்கு பொதுப்பணித் துறையில் ரூ.100 வீதம் கட்டணம் செலுத்தி, வண்டல் மண்ணை பெற்றுக் கொள்ளலாம். விருப்பமுள்ள விவசாயிகள் அனக்காவூர் வட்டாரத்தில் அருகில் உள்ள வேளாண்மை உதவி அலுவலர்களை அணுகி, உரிய விண்ணப்பத்தை சமர்ப்பித்து பயன்பெறலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai