சுடச்சுட

    

    செங்கத்தை அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    விழாவையொட்டி, காலையில் பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வாணவேடிக்கையுடன் வீதியுலா நடைபெற்றது. பூங்கரகம் கோயிலை
    வந்தடைந்ததைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் ஊர் மக்கள் பொங்கல் வைத்து, சுவாமிக்கு படையலிட்டு வழிபட்டனர்.
    பின்னர், தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை வீரானந்தல் கிராம மக்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai