சுடச்சுட

  

  பிளஸ் 2 தேர்வில் போளூர் ஸ்ரீராமஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது.
  போளூரில் உள்ள ஸ்ரீராமஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர் எம்.கோகுலகிருஷ்ணன் 1,150 மதிப்பெண்களும், பி.விக்னேஷ் 1,124 மதிப்பெண்களும், எ.தினேஷ்பாபு 1,117 மதிப்பெண்களும், மாணவி ஜி.திவ்யா 1,105 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
  ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் 11 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். மேலும், இந்தப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவீத தேர்ச்சியை பெற்றுத் தந்துள்ளனர்.
  இந்நிலையில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த ஆசிரியர்களையும் பள்ளித் தாளாளர் சி.ஏழுமலை பாராட்டி, இனிப்பு வழங்கினார். பள்ளி இயக்குநர்கள் ஏ.செந்தில்குமார், ஏ.ஸ்ரீதர், ஏ.சித்ரா, பள்ளித் தலைமை ஆசிரியை அகிலா ஆகியோர் உடனிருந்தனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai