ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் பள்ளி 98 சதவீத தேர்ச்சி
By DIN | Published on : 13th May 2017 08:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பிளஸ் 2 தேர்வில் திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி
98.1 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
இந்தப் பள்ளியில் மொத்தம் 608 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களில், 597 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 98.1 சதவீத தேர்ச்சியாகும். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்றுவித்த ஆசிரிய, ஆசிரியர்களுக்கு பள்ளித் தாளாளர் வி.பவன்குமார், செயலர் டி.எஸ்.ராஜ்குமார், பொருளாளர் டி.வசந்த்குமார்,
ஆங்கில வழிச் செயலர் டி.ஸ்ரீஹன்ஸ்குமார், தமிழ்வழிச் செயலர் வி.நரேந்திரகுமார், அறக்கட்டளை உறுப்பினர்கள் வி.ஜெய்சந்த், எஸ்.ராஜேந்திர குமார், டி.வி.சுதர்சன், வி.நரேந்திரகுமார் ஆகியோர் பாராட்டினர்.