சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 43 அரசு, தனியார் பள்ளிகள் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.
    மாவட்டத்தில் மொத்தமுள்ள 211 அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 80 தேர்வு மையங்களில் பிளஸ் 2 தேர்வை எழுதினர். இதில், 43 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
    8 அரசுப் பள்ளிகள்: திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 48 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதேபோல, கொழப்பலூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 136 பேரும், நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 75 பேரும், அனக்காவூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 50 பேரும், தச்சம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 130 பேரும், லாடாவரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 54 பேரும், மோத்தக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 49 பேரும், ஜவ்வாதுமலை குனிகந்தூர் மலைவாழ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 199 பேரும் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று அந்தந்த பள்ளிகளுக்கு 100 சதவீத தேர்ச்சியை பெற்றுத் தந்துள்ளனர். இதர நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள்
    என மாவட்டத்தில் மொத்தம் 43 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai