சுடச்சுட

    

    பிளஸ் 2 தேர்வில் வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளான இரட்டை சகோதரிகள் மு.வெ.நிலாபாரதி, மு.வெ.அன்புபாரதி ஆகியோர் அதிக  மதிப்பெண்கள் பெற்றனர்.
    இவர்கள் இருவரும் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர்களான மு.முருகேஷ் - அ.வெண்ணிலா தம்பதியரின் மகள்கள் ஆவர். இவர்களில் மு.வெ.நிலாபாரதி 1,200-க்கு 1,169 மதிப்பெண்களும், மு.வெ.அன்புபாரதி 1,165 மதிப்பெண்களும் பெற்றனர். இந்தப் பள்ளியில் மொத்தம் 583 மாணவிகள் தேர்வு எழுதியதில் 466 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 80 சதவீத தேர்ச்சி ஆகும்.
    மற்ற பள்ளிகள்: இதேபோல, வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 73 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்தப் பள்ளியில் மொத்தம் 301 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 219 பேர் தேர்ச்சி பெற்றனர்.
    வந்தவாசி சன்னதி மேல்நிலைப் பள்ளி 96 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்தப் பள்ளியில் மொத்தம் 89 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் 85 பேர் தேர்ச்சி பெற்றனர். வந்தவாசி அகஸ்தியா வித்யாலயா மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்தப் பள்ளியில் மொத்தம் 6 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai