சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஞாயிற்றுக்கிழமை கல் வீசி அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
    தமிழக அரசுடனான போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்க உள்ளது. இந்நிலையில், வந்தவாசி பணிமனை - 1, பணிமனை - 2 ஆகியவை சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் பணிமனைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திரும்பத் தொடங்கின. இதனிடையே, வந்தவாசி பணிமனை - 2 சார்பில், வந்தவாசியிலிருந்து செய்யாறுக்கு இயக்கப்படும் நகரப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தவாசியிலிருந்து புறப்பட்டுச் சென்றது. பேருந்தை ஓட்டுநர் தண்டபாணி ஓட்டினார்.
    வந்தவாசி - செய்யாறு சாலையில் போக்குவரத்துக் கழக வந்தவாசி பணிமனை - 2 அருகில் சென்றபோது, எதிரே தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி மீது கல் வீசி விட்டு தப்பிவிட்டார்.
    இதில், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது. பயணிகள்  யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்த வந்தவாசி தெற்கு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
    மேலும், வந்தவாசி பணிமனை - 1, பணிமனை - 2 ஆகியவை முன் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai