சுடச்சுட

    

    பிளஸ் 2 தேர்வில் செய்யாறு இந்தோ அமெரிக்கன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி பெற்றது.
    இந்தப் பள்ளியில் 85 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு 100 சதவீதத் தேர்ச்சியை பெற்றுத் தந்துள்ளனர்.
    இந்தப் பள்ளியில் 1,000 மதிப்பெண்களுக்கு மேல் 18 மாணவர்களும், பல்வேறு பாடங்களில் பல மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மேலும், 80 சதவிகித மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
    தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளியின் அறக்கட்டளை துணைத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், பள்ளி முதல்வர் (பொறுப்பு) சையத் அப்துல் இலியாஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai