சுடச்சுட

    

    ஊரக வேலைத் திட்டத்தை விரிவுபடுத்தக் கோரி வேட்டவலம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் 2,800 பேர் மனு

    By DIN  |   Published on : 14th May 2017 05:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேட்டவலம் பேரூராட்சியில் ஊரக வேலைத் திட்டத்தை விரிவுபடுத்தக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2,800 பேர் மனுக்களை அளித்தனர்.
    வேட்டவலம் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் ரவிக்குமார் தலைமையில், மாவட்டச் செயற்குழு நிர்வாகி செல்வன் உள்ளிட்டோர் ஊரக வேலைத் திட்டத் தொழிலாளர்களிடம் இருந்து 2,800 மனுக்களை பெற்றனர்.
    வேட்டவலம் பேரூராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலையை விரிவுபடுத்த வேண்டும். கூடுதலாக, தொழிலாளர்களுக்கு 100 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் இந்த மனுக்கள் பெறப்பட்டன.
    இந்த மனுக்களை பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் பிரகலநாதன், மாவட்டச் செயற்குழு நிர்வாகி வாசுகி, ஒன்றியச் செயலர் சொக்கநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஸ்டாலின் மற்றும் ஏராளமான பெண்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களுடன் வேட்டவலம் கடை வீதி வழியாக பேரணியாகச் சென்று, பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரனிடம் மனுக்களை அளித்தனர்.
    இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் முனியம்மாள், பார்வதி, சரசு, சுமதி, அண்ணாதுரை, பிரேம்குமார், குமார் மற்றும் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai