சுடச்சுட

    

    வந்தவாசியை அடுத்த ஏம்பலம் கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    முகாமுக்கு வந்தவாசி மண்டல துணை வட்டாட்சியர் எஸ்.திருமலை தலைமை வகித்தார். முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 66 மனுக்கள் பெறப்பட்டன.
    இந்த மனுக்களை பரிசீலித்த வருவாய்த் துறையினர், 18 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, சிறுகுறு விவசாயச் சான்று உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினர். முகாமில் வருவாய் ஆய்வாளர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் பால்செல்வநாதன், கணேஷ், அருண்குமார், சரவணன், முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai