சுடச்சுட

    

    செண்பகதோப்பு அணை ரூ.10 கோடியில் சீரமைக்கப்படும்க: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்

    By DIN  |   Published on : 14th May 2017 05:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணி அருகே உள்ள செண்பகத்தோப்பு அணை ரூ.10 கோடி யில் சீரமைப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
    ஆரணியை அடுத்த படவேடு அருகே உள்ள செண்பகத்தோப்பு அணை கட்டப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த அணை பல்வேறு குறைபாடுகளால் பயன்பாடில்லாமல் உள்ளது. இந்த அணையின் மூலம் அருகே உள்ள 32 கிராமங்களில் உள்ள 48 ஏரிகளில் தண்ணீர் தேங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் 7,497 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
    இந்த அணை கட்டுமானப் பணி கடந்த 2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2006-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. ஆனால், ரேடியல் ஷட்டரில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக பணிகள் நிறைவடையாமல் நின்றுவிட்டது. இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் அரசு தரப்பில் எச்சரித்தும் பணியை முடிக்காமல் விட்டுவிட்டனர். இது தொடர்பாக அரசு சார்பில் ஒப்பந்ததாரர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
    இந்நிலையில், ஆரணி, படவேடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்பேரில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, செய்யாறு
    எம்எல்ஏ தூசி மோகன், கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அணையை ஆய்வு செய்தனர்.
    அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறியதாவது: தமிழக முதல்வர் ரூ.100 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகளை விவசாயிகளின் நலன் கருதி செயல்படுத்தி வருகிறார்.
    இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செண்பகத்தோப்பு அணையை சீரமைத்தால் சுமார் 32 கிராம விவசாயிகள் பயனடையும் நிலை உள்ளதாக அளித்த கோரிக்கை மனுவின்பேரில், சுமார் ரூ.9.95 கோடி மதிப்பீட்டில் அணையின் ஷட்டரை சீரமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, முதல்வரின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் விரைவில் இந்தப் பணி நடைபெற்று விவசாயிகளின் நலன் காக்கப்பட உள்ளது என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai