சுடச்சுட

    

    பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இருப்பிடப் பயிற்சி முகாம் நிறைவு

    By DIN  |   Published on : 14th May 2017 05:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் நடைபெற்று வந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இருப்பிடப் பயிற்சி முகாமின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், உலக திறனாளர்களை கண்டறியும் திட்டத்தின்கீழ், கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளில் நடைபெற்று வந்தன.
    இந்தப் போட்டிகளில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு 15 நாள் இருப்பிடப் பயிற்சி முகாம் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்தது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 120 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
    கூடைப்பந்து, கைப்பந்து, ஹாக்கி, தடகளம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதன் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திருவண்ணாமலை மண்டல முதுநிலை மேலாளர் க.புகழேந்தி தலைமை வகித்தார்.
    மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) ஏ.முனியன் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், சீருடைகளை வழங்கினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai