சுடச்சுட

  

  திருவண்ணாமலை அருகே இளம் பெண்களைத் தாக்கியதாக 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
  திருவண்ணாமலையை அடுத்துள்ளது களஸ்தம்பாடி கிராமம். இந்தக் கிராமத்துக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் குழாய் சில தினங்களுக்கு முன்பு உடைந்து விட்டதாம். எனவே, அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (23), முனுசாமி (29), பச்சைமுத்து (29), பார்த்திபன் (28) ஆகியோர் பணம் செலவு செய்து குழாயை சரிசெய்தனராம். இதையடுத்து, செலவு செய்த தொகைக்காக ஒரு குடும்பத்துக்கு ரூ.50 வீதம் நால்வரும் சேர்ந்து பணம் வசூலித்தனராம். ஆனால், அதே பகுதியைச் சேர்ந்த பிருந்தா (29) பணம் தர மறுத்தாராம்.
  இதையடுத்து, வெங்கடேசன் உள்ளிட்ட நால்வருக்கும், பிருந்தாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த இளைஞர்கள் 4 பேரும் சேர்ந்து பிருந்தாவைத் தாக்கியதாகத் தெரிகிறது. தடுக்க வந்த பிருந்தாவின் உறவினர் சாந்தியும் தாக்கப்பட்டார்.
  இதுகுறித்த புகாரின்பேரில், மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து, பச்சைமுத்து உள்பட நால்வரையும் கைது செய்தனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai