சுடச்சுட

    

    பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: ஒடிஸா மாநில இளைஞர் சாவு

    By DIN  |   Published on : 14th May 2017 05:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கீழ்பென்னாத்தூரில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.
    ஒடிஸா மாநிலம், புவனேசுவரம் பகுதியைச் சேரந்தவர் லிங்கிராஜ் பாத்ரா மகன் பிரசாத் பாத்ரா (24). இவர், பெங்களூரில் உள்ள பேஷன் டெக்னாலஜி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
    இந்நிலையில், பிரசாத் பாத்ரா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து 3 பைக்குகளில் பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டனர். பிரசாத் பாத்ரா மட்டும் தனியாக ஒரு பைக்கை ஓட்டிச் சென்றார்.
    கீழ்பென்னாத்தூர், சந்தைமேடு பகுதியில் சனிக்கிழமை காலை சென்றபோது எதிரே வந்த அரசுப் பேருந்து, பைக் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த பிரசாத் பாத்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீஸார் விரைந்து சென்று அவரின் சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai