சுடச்சுட

  

  செய்யாறு அருகே சனிக்கிழமை பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
  செய்யாறு, கீழ்புதுபாக்கம் விரிவுப் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் சக்திநாதன் (23). இவர், மொக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். சக்திநாதன் காஞ்சிபுரம் சென்றுவட்டு செய்யாறுக்கு பைக்கில் திரும்பிக்கொண்டு இருந்தார்.
  விண்ணவாடி கூட்டுச்சாலை அருகே வளைவுப் பகுதியில் சென்றபோது, செய்யாறிலிருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, பைக் மீது மோதியதாகத் தெரிகிறது. அப்போது, பேருந்து சக்கரத்தில் சிக்கிய சக்திநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து அவரது தந்தை முருகேசன், செய்யாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
  அதன்பேரில், காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி மற்றும் போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், சக்திநாதனின் சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai