Enable Javscript for better performance
பொக்லைன் மோதியதில் ஜார்க்கண்ட் மாநில இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    வேட்டவலம் அருகே பொக்லைன் இயந்திரம் மோதியதில் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த ஜார்க்கண்ட் மாநில இளைஞர் உயிரிழந்தார்.
    வேட்டவலம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜோவான் (24) ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், வேட்டவலம் அண்ணா நகரில் வியாழக்கிழமை நள்ளிரவு ஜோவான் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக பொக்லைன் இயந்திரம் ஜோவான் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே ஜோவான் உயிரிழந்தார். இதுகுறித்து, வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai