சுடச்சுட

    

    வந்தவாசி அருகே புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டட மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
    வந்தவாசியை அடுத்த மங்கலம், மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் (53). இவர், அந்தப் பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். சாமுவேல் அந்தக் கிராமத்தில் புதிதாக மாடி வீடு கட்டி வருகிறார்.
    இவரது மகன் ஜெபராஜ் (25), கடந்த வியாழக்கிழமை புதிய கட்டடத்தின் மாடிப் பகுதியில் நின்று கொண்டு கட்டடத்துக்கு தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது, சுற்றுச்சுவர் இல்லாததால் ஜெபராஜ் தவறி கீழே விழுந்தாராம்.
    இதில் பலத்த காயமடைந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு ஜெபராஜ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து சாமுவேல் அளித்த புகாரின்பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai