சுடச்சுட

  

  மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி

  By DIN  |   Published on : 14th May 2017 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், செய்யாறில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமாரின் அறிவுறுத்தலின்படி, செய்யாறு வட்டார வள மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
  இதில், திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகளின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் பங்கேற்று, மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் பெற்றோருக்கு ஊக்கமளிக்கும் வகையில் கருத்துக்களை எடுத்துக் கூறினார். முன்னிலை வகித்த செய்யாறு வட்டார வள மைய மேற்பார்வையாளர் க.சீனுவாசன், வட்டார வள மையத்தின் மூலமாக மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்.
  செய்யாறு, வெம்பாக்கம், அனக்காவூர், வந்தவாசி, தெள்ளாறு, பெரணமல்லூர் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த மாற்றுத் திறன் கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
  ஏற்பாடுகளை இயன்முறை மருத்துவர்கள் தி.ரகுபதி, எம்.சத்யா, அலிம்கோ தொழில்நுட்ப வல்லுநர்கள், ஒருங்கிணைப்பாளர் தி.வைரப்பிரியா, சிறப்பாசிரியர்கள் சந்துரு, கு.கண்ணன், ப.ஜெயசுதா, மு.மாலதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai