சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே மொபெட் பெட்டியிலிருந்து ரூ.97 ஆயிரத்தை நூதன முறையில் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலையை அடுத்த மங்கலம், கீழ்பாலானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஊராட்சி அலுவலக எழுத்தர் அண்ணாமலை (59). இவர், வெள்ளிக்கிழமை மங்கலம் பகுதியில் உள்ள வங்கியில் இருந்து ரூ.97 ஆயிரம் பணத்தை எடுத்தாராம்.
    பின்னர், வங்கிக்கு வெளியே மொபெட் பெட்டியில் பணத்தை வைத்துவிட்டு மொபெட்டை தள்ளினாராம். அப்போது, மொபெட்டின் முன்பக்க டயர் பஞ்சராகி இருந்தது தெரியவந்தது. எனவே, பஞ்சர் கடைக்கு மொபெட்டை தள்ளிச் சென்ற அண்ணாமலை, டயரை சரிசெய்து தருமாறு கடைக்காரரிடம் கூறிவிட்டு அருகே அமர்ந்திருந்தாராம். அப்போது, சிலர் அண்ணாமலையின் மொபெட் அருகே நின்றிருந்தனராம். பின்னர், அனைவரும் திடீரென கிளம்பிச் சென்றனராம்.
    சந்தேகமடைந்த அண்ணாமலை, மொபெட் பெட்டியைப் பார்த்தபோது, பெட்டி திறந்திருந்ததுடன், அதிலிருந்த ரூ.97 ஆயிரம், வங்கிப் புத்தகம் ஆகியவற்றை காணவில்லையாம். உடனே மர்ம நபர்களை அக்கம், பக்கம் தேடியும் கிடைக்கவில்லையாம். இதுகுறித்த புகாரின்பேரில், மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்கள் 3 பேரை தேடி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai