சுடச்சுட

    

    பிளஸ் 2 தேர்வில் செய்யாறு விஸ்டம் கல்விக் குழுமத்தைச் சேர்ந்த விஸ்டம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, விஸ்டம் வித்யாஷ்ரம் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவை 100 சதவீதத் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தன.
    விஸ்டம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி: செய்யாறை அடுத்த செய்யாற்றைவென்றான் விஸ்டம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 66 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவீத தேர்ச்சியை பெற்றுத்தந்துள்ளனர்.
    மாணவி எம்.கெளசிகா 1,185 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றார். இந்தப் பள்ளியில் 1,100 மதிப்பெண்களுக்கு மேல் 15 மாணவர்களும், 1,000 மதிப்பெண்களுக்கு மேல் 33 மாணவர்களும், பல்வேறு பாடங்களில் பல மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்களும் பெற்றனர். மேலும், 80 சதவீத மாணவர்கள் எ, பி கிரேடுகளை பெற்றனர்.
    விஸ்டம் வித்யாஷ்ரம் மெட்ரிகுலேஷன் பள்ளி: இதேபோல, செய்யாறு - ஆற்காடு சாலையில் உள்ள விஸ்டம் வித்யாஷ்ரம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 104 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும். அதிகபட்சமாக மாணவர் ஜி.என்.எஸ்.கவின் 1,172 மதிப்பெண்கள் பெற்றார்.
    மேலும், 1,100 மதிப்பெண்களுக்கு மேல் 15 மாணவர்களும், 1,000 மதிப்பெண்களுக்கு மேல் 33 மாணவர்களும், பல்வேறு பாடங்களில் பல மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்களும் பெற்றனர். மேலும், 80 சதவீத மாணவர்கள் எ, பி கிரேடுகளை பெற்றனர்.
    இந்நிலையில், விஸ்டம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, விஸ்டம் வித்யாஷ்ரம் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவற்றுக்கு 100 சதவீத தேர்ச்சியை பெற்றுத் தந்த மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் விஸ்டம் கல்வி அறக்கட்டளைத் தலைவர் டி.ஜி.மணி, விஸ்டம் கல்விக் குழுமத்தின் பள்ளி முதல்வர்கள் விஸ்டம் பள்ளி ஜி.மதியழகன், விஸ்டம் வித்யாஷ்ரம் பள்ளி எஸ்.நந்தகுமரன், பிரிஸ்டன் இன்டர்நேஷனல் பள்ளி டி.மணிவாசகம், துணை முதல்வர்கள் வி.அன்பழகன், யு.ஸ்ரீதேவி, எம்.வெங்கடேசன், எஸ்.சரவணன் ஆகியோர் பாராட்டினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai