Enable Javscript for better performance
ஸ்ரீசெளடேஸ்வரி அம்மன் கோயில் முதலாமாண்டு விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீசெளடேஸ்வரி அம்மன் கோயில் முதலாமாண்டு விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

    By DIN  |   Published on : 14th May 2017 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை, ராஜராஜன் தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீசெளடேஸ்வரி அம்மன் கோயிலின் முதலாமாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    இதையொட்டி, காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், கலசபூஜை, 11 மணிக்கு மஹா அபிஷேகம், பூர்ணாஹுதி, நண்பகல் 12 மணிக்கு தீபாராதனை, கடம்புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  பிற்பகல் 12.30 மணிக்கு ஸ்ரீராமலிங்க செளடேஸ்வரி அம்மன், பரிவார தேவதைகளுக்கு கலசாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சாமி பிரசாதம், அன்ன தானம் வழங்கப்பட்டன.
    மாலை 5 மணிக்கு அம்மனுக்கு 1,008 சகஸ்ரநாம பூஜை, இரவு 8 மணிக்கு ஸ்ரீராமலிங்க செளடேஸ்வரி அம்மன் வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai