சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 950 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்தார்.
  திருவண்ணாமலை ஒன்றியம், நொச்சிமலை ஊராட்சிக்கு உள்பட்ட வாணியந்தாங்கல் பகுதியில் ஓடையின் குறுக்கே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் ரூ.92 ஆயிரம் மதிப்பில் புதிய தடுப்பணை கட்டும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணியை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், சிறிது நேரம் தொழிலாளர்களுடன் சேர்ந்து தடுப்பணை கட்டும் பணியில் மு.வடநேரே
  ஈடுபட்டார்.
  பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  மாவட்டத்தில் மொத்தம் 1,037 தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 950 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார். ஆய்வின்போது, திருவண்ணாமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வி.புருஷோத்தமன், பெ.அமாவாசை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் என்.மோகன்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) இனியன், உதவி செயற்பொறியாளர் கே.ராஜராஜன், உதவிப் பொறியாளர்கள் ரவிச்சந்திரன், ராஜலட்சுமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai