Enable Javscript for better performance
அருணாசலேஸ்வரர் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    இந்தக் கோயிலில் பிரசித்தி பெற்ற சித்ரா பெளர்ணமி விழா கடந்த
    10-ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். அன்றைய தினம் மூலவர் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் பலர் ஞாயிற்றுக்கிழமை கோயிலில் திரண்டனர். இதனால், பொது தரிசன வரிசை, கட்டண தரிசன வரிசையில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
    பொது தரிசன வரிசையில் சுமார் 3 மணி நேரமும், கட்டண தரிசன வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய 2 மணி நேரமும் ஆனதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai