Enable Javscript for better performance
இளைஞர் மீது தாக்குதல்: நெல் தரகு வியாபாரி கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே இளைஞரை தடியால் தாக்கியதாக நெல் தரகு வியாபாரியை போலீஸார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலையை அடுத்த நூக்காம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (50). திருவண்ணாமலை - வேட்டவலம் சாலையைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (45). இவரும் நெல் தரகு வியாபாரிகள்.
    தொழில் ரீதியாக நண்பர்களான இவர்களுக்குள் பணம் கொடுக்கல், வாங்கல் இருந்துள்ளது. இந்நிலையில், மனோகரனுக்கு சத்தியமூரத்தி ரூ.ஒரு லட்சத்து 75 ஆயிரத்தை கொடுக்க வேண்டியிருந்ததாம். இந்தப் பணத்தை மனோகரன் மகன் அருண்குமார் (34) பலமுறை கேட்டும் சத்தியமூர்த்தி தரவில்லையாம். கடந்த 7-ஆம் தேதி திருவண்ணாமலை - காஞ்சி சாலையில் சத்தியமூர்த்தி நின்றிருந்தாராம்.
    அப்போது, அவரிடம் அருண்குமார் பணம் கேட்ட நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில், ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி, அருண்குமாரை  தடியால் தாக்கினாராம். காயமடைந்த அவர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.
    இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் அருண்குமார் சனிக்கிழமை புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai