சுடச்சுட

  

  கண்ணமங்கலம் அருகே இரும்புலி கிராமத்தில் கேட்பாரின்றி 3 நாள்களாக நின்றிருந்த காரில் இருந்து அரை டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
  ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே இரும்புலி பகுதியைச் சேர்ந்த செங்குலத்தில் 3 நாள்களாக கேட்பாரின்றி ஒரு கார் நின்றிருந்தது. இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
  அதன்பேரில், கண்ணமங்கலம் போலீஸார் காரில் சோதனை செய்தனர். சோதனையின்போது, காரில் 500 கிலோ செம்மரக் கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காரையும், அதிலிருந்த செம்மரக் கட்டைகளையும் போலீஸார் பறிமுதல் செய்து, கண்ணமங்கலம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
  மேலும், அந்தக் கார் தமிழக பதிவெண் கொண்டதாக இருந்தது. காரினுள் ஆந்திர மாநில பதிவெண் கொண்ட மற்றொரு நம்பர் பிளேட் இருந்தது. இந்த
  2 நம்பர் பிளேட்டுகளையும் போலீஸார் ஆய்வு செய்தபோது, அவை போலியானவை என்பது தெரியவந்தது.
  இதையடுத்து, செம்மரக் கட்டைகளை யார் கடத்த முயன்றனர் என்பது குறித்தும், இந்தக் கார் யாருடையது என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இந்த செம்மரக் கட்டைகள் ஆந்திரத்தில் இருந்து கடத்திவரப்பட்டனவா என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai