சுடச்சுட

    

    கருணாநிதியின் 94-ஆவது பிறந்த நாள்: ஜூன் 3-இல் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்க திமுக முடிவு

    By DIN  |   Published on : 15th May 2017 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்க திமுக செயற்குழு முடிவு செய்துள்ளது.
    திருவண்ணாமலை மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாவட்ட திமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் த.வேணுகோபால் தலைமை வகித்தார். தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி, சொத்து பாதுகாப்பு குழுச் செயலர் பெ.சு.திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு பேசினார். கூட்டத்தில், திமுக தலைவர் கருணாநிதியின் 94-ஆவது பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதியையொட்டி, மாவட்டத்தில் பொதுக்கூட்டம், பட்டிமன்றம், பாட்டரங்கம், கொடியேற்று நிகழ்வுகள், ஏழை, எளியோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
    ஜூன் 3-ஆம் தேதி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் உள்ள 4 தொகுதிகளிலும் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீராதாரங்களை தூர்வார வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    இதில், மாவட்ட துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன், நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், மருத்துவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, வழக்குரைஞர் அருள்குமரன், நகராட்சி குழுத் தலைவர் குட்டி க.புகழேந்தி, அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் மாவட்டத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai