Enable Javscript for better performance
கெங்கபுரம் ஊராட்சியில் ஆழ்துளை கிணறு அமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    கலசப்பாக்கத்தை அடுத்த கெங்கபுரம் ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அண்மையில் 2 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன.
    இந்தப் பணியை எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் தொடக்கிவைத்தார்.
    கெங்கபுரம் ஊராட்சியில் 8 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 2,500 மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஆழ்துளைக் கிணறுடன் கூடிய குடிநீர்த் தொட்டி அமைத்துத் தர வேண்டும் என கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீர்செல்வத்திடம் அந்த ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    இதைத் தொடர்ந்து, கெங்கபுரம் ஊராட்சியில் 2 இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைக்க சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சத்தை எம்எல்ஏ ஒதுக்கினார். இதையடுத்து, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி அண்மையில் நடைபெற்றது. இந்தப் பணியை எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் தொடக்கிவைத்தார். ஒன்றியச் செயலர் திருநாவுக்கரசு, மாவட்ட துணைச் செயலர் துரை மற்றும் அம்மா அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai